இந்த வார்த்தை விளையாட்டில் வட்ட வடிவில் கலைந்திருக்கும் எழுத்துக்களை ஒன்று சேர்த்து சொற்களை கண்டுபிடிக்கவேண்டும். சரியான வார்த்தைகள் மேலுள்ள கட்ட வரிசையில் மறைந்திருக்கும். எழுத்துக்களை கொண்டு சேர்த்த வார்த்தைகள் கட்ட வரிசையில் சேர்க்கப்படும். இவ்வரிசையில் சேர்த்த வார்த்தைகளை குறிப்பாக பயன்படுத்தி மற்ற வார்த்தைகளை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
இந்த விளையாட்டில் 400 நிலைகள் உள்ளன. தொடக்கத்தில் எளிதான நிலைகளும் இறுதியில் கடினமான நிலைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலையிலும் இரு உதவிகள் வழங்கப்படும்.